எப்பொழுது விகடன்.காம் போனாலும், ஆவி மட்டுமே படிப்பது வழக்கம். நேரம் நகரவே மாட்டேன் என்றால் மட்டுமே ஜுவி, அவி, சுவி எல்லாம் படிப்பேன். அப்படி புரட்டிகொண்டிருந்த போது, அப்படி என்ன தான்பா பவி’ல சொல்லியிருக்காங்க, என்று கொஞ்சம் தடவினேன்.
விகடன் பாதி வியாபாரமாகி விட்ட காலமிது. 144 பக்கங்களில், கொஞ்சம் கட்டுபடுத்திக்கொண்டு பழைய விஷயங்களை தொடர்வது, நீண்ட கால வாசகர்கள் எல்லோரும் தெரிந்திருக்கும் விஷயம். வந்த பாதையில் பலவற்றை தொலைத்து விட்டாலும், பசுமை விகடனில் தொலைத்ததை [...]