Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘சினிமா’ பகுப்புக்கான தொகுப்பு

Pixar studios எடுத்திருக்கும் அடுத்த படமிது.

2 வருடங்களுக்கு முன், நான் கலிபோர்னியாவில் இருந்த போது என் அலுவலகம் இருந்த இடம் Pixar studios இருந்த தெருவிற்கு இரண்டாவது தெரு. பஸ்ஸில் போகும் போதெல்லாம், Pixar அனிமேட்டர்கள் பயணம் செய்வது வழக்கம். அப்படி பயணம் செய்த ஒருவர் 2 வருடங்களுக்கு முன் சொன்ன விஷயம், ‘நாங்கள் இப்போது வேலை செய்து கொண்டிருக்கும் project பெயர் WALL-E’. கிட்டதட்ட எனக்கு தெரிந்தே 2 வருடங்களுக்கு மேல் உழைக்கபட்ட ஒரு படம்.

படம் [...]

முழு பதிவையும் வாசிக்க »

நேரம் கிடைத்த போதெல்லாம் முடிந்தவரை சோம்பேறியாய் இருந்துவிட்டதன் பயன், உடல் சிறிது பெருத்து போய், whole milk வாங்கியவன் இப்போதெல்லாம் 2% fat only milk வாங்க ஆரம்பித்து விட்டேன். சரி விட்டுபோன சினிமா பார்க்கும் பழக்கத்தை மறுபடியும் ரிப்பன் வெட்டி துவக்கி, atleast, அக சோம்பேறிதனத்தை தள்ளி போட முடிவு செய்து BlockBuster’ல் சேர்ந்தேன். பார்த்த படங்கள் (எல்லாம் பழசு தான்) பற்றி குட்டியாக சொல்ல ஆசை.Pursuit of Happyness – உண்மை தழுவிய கதை. [...]

முழு பதிவையும் வாசிக்க »


நீ நெருங்கும் போதே
கரண்ட் ஏறுதே
உங்க ஊரு
கல்பாக்கமா?

நரம்பெல்லாம்
முறுக்கேறுதே
ஏண்டி நீயும்
மணப்பாறையா?

அழகிய தமிழ் மகனில் இப்படி வார்த்தைகள் வடித்து விட்டிருக்கிறார் நா. முத்துகுமார். இந்த பாட்டில் ரஹ்மான் சாயல் அடிக்கவில்லை என தோன்றுகிறது (‘நீ நாதஸ்வரம் போல வந்தால் நாபிகமலம் நானா, நீ ஏழு ஸ்வரம் போல வந்தால் எட்டா ஸ்வரம் நானா’ தவிர). ஆனால், படத்தில் எனக்கு பிடித்த பாடல் இது மட்டும் தான். அசத்தலான நரேஷ் ஐயர். ரஹ்மானின் செல்ல பிள்ளை என்பது சரியாய் தானிருக்கிறது. நடுவில் [...]

முழு பதிவையும் வாசிக்க »

Gandhi my father

சராசரிக்கும் சற்று உயரத்தில் (ஹைட் இல்லை) உள்ள அப்பா. மிக சராசரியான மகன். பிரச்சினைகள், முழுக்க முழுக்க சராசரி. வீட்டுக்கு வீடு கதவு மேட்டர் தான். அப்பாவாக மிஸ்டர் மோஹன் தாஸ் கரம்சந்த் காந்தி இருக்க, அவரின் சாதாரண மகனாக ஹரிலால் இருக்க, அந்த கதை தேசத்திற்கு தீனியாகி விட, படமாகவும் ஆடிவிட்டது.வழக்கம் போல இதற்கும் நெருக்கடி குடுத்து சிலர் பிரபலம் ஆகிவிட்டார்கள் போல.படம் பார்க்க போன தியேட்டரில் மயான அமைதி. யாராவது சதிதிட்டம் தீட்ட அந்த [...]

முழு பதிவையும் வாசிக்க »

…காதல் வரம் நான் வாங்ககடைகண்கள் நீ வீசகொக்கை போல நாள்தோறும்ஒற்றை காலில் நின்றேன்கண்மணி…நின்றாய் இங்குமின்னல் கீற்றாய்நித்தம் வாங்கும்மூச்சு காற்றாய்உன்னை சூழ்கிறேன்நான்உன்னை சூழ்கிறேன்…இதில், மிர்ச்சி சிவா சுத்தமான அக்மார்க் சொதப்பல் சொதப்பி இருப்பார். வெங்கட் பிரபு சின்ன சின்ன இடங்களில் பாரம்பரிய தமிழ் சினிமா காட்சி காட்டி, முடிந்தவரை சொதப்பி இருப்பார். விஜயலக்ஷ்மி, சொல்றத்துக்கு ஒன்னுமில்லீங். இன்னொரு ரவுண்ட் வந்தால் சுகமாக இருக்கும்.ரவுண்டு கட்டி அடித்திருப்பது SPB, சித்ரா, யுவன். நேற்றைக்கு காபி வித் அனுவில், தேவன் (ஸ்மையாய் [...]

முழு பதிவையும் வாசிக்க »

இந்த வருடத்தில் எதிர்பார்த்து காத்திருந்த படத்தில் ஒன்று மொழி. வந்து சில மாதங்கள் ஓடி, கேன்ஸ் வரை ஊர்கோலம் போயும் வந்தாகிவிட்டது. அவசரமில்லாமல், இரண்டரை மணி நேரம் இதற்காக ஒதுக்கி, அமைதியாக பார்த்தேன். விமரிசனத்துக்கு ஒன்றும் குறைவில்லாமல், எல்லாரும் பேசியாகிவிட்டது. எப்போதாவது, குடும்பத்தோடு சினிமா பார்க்கும் சில பேர், மொழி பார்க்கவேண்டும் என்று முறுக்கு, மிக்ஸருடன் தியேட்டருக்கு சென்ற பலர், பிரகாஷ் ராஜுக்கு கண்டிப்பாக நன்றி சொல்லவேண்டும்.எனக்கு பிடித்ததை பதிவு செய்துவிட நினைத்து இந்த வார்த்தைகள். முதல் [...]

முழு பதிவையும் வாசிக்க »

என்னவோ தேவை இல்லாமல், கமலின் அப்பாக்களில் யாரை எனக்கு பிடித்திருந்தது, என யோசனை. வெட்டி யோசனை தான். ஆனால், யோசித்து பார்த்ததில், பிடித்தவர்கள் இதோ,பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளை: வீட்டு சாமரத்தில் (சரியான வார்த்தையா தெரியவில்லை, நடு வீட்டில் மாடியை பார்த்தார் போல இருக்கும் கம்பி) மகனை தொங்கவிட்டு பார்க்கும், அழகான அப்பா. சங்கீதம், இதோ இவர்களுக்கு மட்டும் தான் என நினைக்கும் சாதனையாளர். மகன், சாஸ்திரிய சங்கீதத்தை, மரத்தை உடைப்பவர்களிடம் சொஷலிசத்துடன் தந்தன்னானா பாடினால் கண்ணாடியை தாண்டி [...]

முழு பதிவையும் வாசிக்க »

பக்கோரா – 5$, சமோசாவும் 5$, சிக்கன் ஸ்பைஸி 10$. உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லயாடா. யானை விலை விக்கறீங்க, என நொந்து கொண்டே கியுவில் நின்று கொண்டிருந்தோம். சுற்றி நம்மவர்கள் தான். ஆரம்பித்து விட போகிறார்கள், சீக்கிரம் சாப்பிட்டு விட்டு போக அவசரபட்டுகொண்டிருந்தோம். உள்ளே, Blaze குரல் கொடுக்க ஆரம்பித்தார். ரஹ்மான் பெயரை சொல்ல, கியுவில் நின்றிருந்த 3 இளசுகள் (பெண்கள் தான், 25 – 23 வயசுக்கு மத்தியில் தான்), ஏதோ மிதிக்க கூடாததை மிதித்தது [...]

முழு பதிவையும் வாசிக்க »

ரஜினி – ஒரு சினிமா ரசிகனாக என்னை எப்போதும் ஏமாற்றாத ஒரு நடிகர். டிரயிலருக்கே சூடம் ஏற்றி, பேப்பர் கிழித்து போட்டு, தலைவா என எட்டு கட்டையில் அலறும் ரசிகனை இன்றும் பெற்றிருக்கும் வயது வந்த நடிகர். டெக்னிக்கலாக கலாசும் மக்கள் இவர் படத்தில் வேலை செய்திருந்தாலும், ரஜினி என்ற ஒரு சொல் மட்டுமே, தயாரிப்பாளரின் லாபத்துக்கு உத்திரவாதம். இவரின் மேனரிசங்களை, இப்போதைய தளபதிகள் முட்டி மோதி செய்தாலும், அட போப்பா உனக்கு வேற வேல இல்ல [...]

முழு பதிவையும் வாசிக்க »

பெட்டிக்கு வெளியே யோசிங்க(Think-out-of-the-box) என்று பொதுவாக சொல்வார்கள். மாத்தி யோசிங்கப்பா, நீங்க பண்றது எல்லாம் போர் அடிக்குது. அப்படி கண்ணா பிண்ணாவென போர் அடித்த சில…தொடர் படங்கள் (sequel movie)இதை யார் தொடங்கி வைத்தார்கள் என தெரியவில்லை. அவர் இருந்தால், தலைவா, போதும் நீ சொன்னதும், இவங்க அத கிண்டி உப்புமா பண்றதும் என சொல்ல தோன்றுகிறது. இந்த வகை, பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம். பாக்ஸ் ஆபிஸில் மில்லியன் மில்லியனாக கொள்முதல் செய்திருக்கிறார்கள். இப்போதும் அப்படி என்று [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »