Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘அனுபவம்’ பகுப்புக்கான தொகுப்பு

உன்னாலே உன்னாலே பித்தம் தெளிந்தபாடில்லை நிறைய பேருக்கு. ஸ்பென்ஸரில் கூட்டமாய் இருந்த நேரத்தில், எங்கோ ஒரு செல்லில் ஜூன் போனா டோன் வர, சில பேர் தங்கள் செல்லை எடுத்து பார்த்தார்கள்.

3 வாரம் இந்தியா பார்க்க போயிருந்தேன். சக் தே வெற்றி பெற்று, ஹாக்கி அணி ஆசியா கோப்பை வெற்றி பெற்று, ஜெய் ஹிந்த் மாறி சக் தே இந்தியா சொல்ல ஆரம்பித்திருந்தார்கள். திரும்ப வரும் போது தோனி, கையில்லா பனியனுடன் உலக கோப்பை வாங்கி இன்னமும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

பேய் பசி அன்று. அரக்க பரக்க fridge துழாவியதில், பார்த்து இளித்தது நேற்றைய ரசம். எதை செய்தாலும் மெகாவாக செய்து பழக்கமாகிவிட்டதால், இன்னமும் ரசம் அய்யா தளும்பிகொண்டிருந்தார். ஏனோ, நேற்று இரவு இதை சாப்பிட்டு அல்லது வலுக்கட்டாயமாக தன் வாயில் திணித்த என் அறை நண்பரின் அதீத அமைதி ஞாபகம் வந்து தொலைத்தது. இப்போதைக்கு, மணக்க மணக்க எந்த கன்றாவியும் செய்யும் நிதானம் இல்லாததால், ரசமான அவர் சாதத்துடன் கலக்கபட்டார். அப்பளம் வறுப்போம் என மைக்ரோவேவில் [...]

முழு பதிவையும் வாசிக்க »

கொஞ்சம் நன்றாகவே தமிழ் சினிமா பார்ப்பவராக இருந்தால், உங்கள் பின் மூளையில் கவுண்டமணி என்ட்ரி ஆகியிருப்பார்.இவரை உலுக்கி உலுக்கி கனவை கலைத்து காமெடி செய்திருப்பார்கள். கனவு மேட்டரை, முடிந்தவரை, இரவை தவிர மற்ற நேரத்தில் கண்டு அதற்கான பின் முன் சைட் விளைவுகளை அவரின் ஸ்டீரியோ குரலால் அலற அலற நகைச்சுவை இருந்திருக்கும்.உண்மையில் அது பதறடிக்கும் விஷயமே. கண்ணாடியை மூக்கின் நுனியில் வைத்து, சரியாக குளிக்காமல் ஆராய்ச்சி செய்யும் எந்த ஒருவரும் இதை வியாதி தாங்க என்பார்கள். [...]

முழு பதிவையும் வாசிக்க »

டயட்

சப்வே (மவுண்ட் ரோட் சப்வே இல்லை. பல நாடுகளில் கிளை விரித்து பரந்திருக்கும் ஒரு பிரட் – சான்ட்விச் விக்கிற கடை) – இந்த பெயரை கேட்டாலே (அதிராதுங்க!!), 12″ பிரட் காய்கறிகளுடன் பிதுங்கி கண் முன் வந்து நிற்கும். இங்கு வந்த முதல் நாளே எனக்கு அறிமுகமான இந்த ஊர் உணவு இது. வருவதற்கு முன் வெஜிடேரியன் மட்டும் தான் சாப்பிடுவேன் என சத்தியபிரமாணம் எதுவும் எடுத்துகொள்ளவில்லை. ஆனால், இப்படியே புல் பூண்டு சாப்பிட்டு வாழ்க்கையை [...]

முழு பதிவையும் வாசிக்க »

டாஸ்மாக் பாரை அழித்திடுவோம் மெஸன்ஞரில் எப்போதும் எட்டி பார்க்காத நண்பன் அன்று ‘என்னப்பா தம்பி, நல்லா இருக்கியா?’. Message எட்டி பார்த்தது.
இவன் – சொல்வதற்கு பெரிதாய் இல்லாத, கல்லூரியில் லூட்டி அடித்தும், கொஞ்சம் படித்தும் பொழுதை ஒன்றாக சுற்றிய நண்பன்.கல்லூரி விட்டு வெளியேறிய பொழுது, நிறைய பேருக்கு, கையில் இரண்டு மூன்று சாய்ஸ் இருந்தது, வேலைக்கு சேர. தறி கெட்டு ஓடவில்லை என்றாலும், மெகா சைஸில் படிக்காததால், நாங்கள் சிலர் கோடம்பாக்கம் சாலைகளிலும், மவுண்ட் ரோடிலும், [...]

முழு பதிவையும் வாசிக்க »

பெட்டிக்கு வெளியே யோசிங்க(Think-out-of-the-box) என்று பொதுவாக சொல்வார்கள். மாத்தி யோசிங்கப்பா, நீங்க பண்றது எல்லாம் போர் அடிக்குது. அப்படி கண்ணா பிண்ணாவென போர் அடித்த சில…தொடர் படங்கள் (sequel movie)இதை யார் தொடங்கி வைத்தார்கள் என தெரியவில்லை. அவர் இருந்தால், தலைவா, போதும் நீ சொன்னதும், இவங்க அத கிண்டி உப்புமா பண்றதும் என சொல்ல தோன்றுகிறது. இந்த வகை, பெரும்பாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம். பாக்ஸ் ஆபிஸில் மில்லியன் மில்லியனாக கொள்முதல் செய்திருக்கிறார்கள். இப்போதும் அப்படி என்று [...]

முழு பதிவையும் வாசிக்க »

கெளம்புய்யா சீக்கிரம். லேட்டா கெளம்பினா எல்லாம் மிஸ் ஆகிடும். நண்பரும் நானும் பாரம்பரியமாக பெரும்பாலான இந்திய வாழ் அமெரிக்கர்கள் (சே, அமெரிக்க வாழ் இந்தியர்கள்) ஆற்றும் ஜனநாயக கடமையை ஆற்ற கிளம்பினோம். வேறென்ன downtown (SFO – Bay area) விஜயம் தான்.சரி, எப்பவும் போல ஓங்கி உலகளக்கும் பில்டிங் பார்த்து, அமெரிக்க குட்டிகளை கண் குளிர சைட்டடித்து (அட, நாய் குட்டிங்க), கால் வலித்தாலும் கூலாக நடந்து, குளிர் காற்று தான் வாங்க போகிறோம் என்று [...]

முழு பதிவையும் வாசிக்க »

தனி ஒருவனுக்குஉணவில்லையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்!!!- பசியெடுத்து வாடிய போது நினைவுக்கு வந்த கவிராஜனின் வரிகள். எத்தனை நிஜம்.

முழு பதிவையும் வாசிக்க »

தனி ஒருவனுக்குஉணவில்லையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்!!!- பசியெடுத்து வாடிய போது நினைவுக்கு வந்த கவிராஜனின் வரிகள். எத்தனை நிஜம்.

முழு பதிவையும் வாசிக்க »

வெயில் கசகசக்கும் மதியத்தை கடந்த மாலையில், சிலர் மட்டுமே கூடியிருந்த பார்ட்டி. கடமைக்காக சிலரும், டீ காபி போண்டாவுக்காக சிலரும், வருத்ததுடன் சிலரும், சந்தோஷத்துடன் சிலரும் உலாத்தி கொண்டிருந்தார்கள்.

இவர் மகிழ்ச்சியும் வருத்தமும் பயமும் கலந்து கட்டிய முகத்துடன் பேசிக் கொண்டே, பழைய நினைவுகளை அசை போட கூடாது என்றே தன்னை எதாவது ஒரு விஷயத்தில் நுழைத்துகொண்டபடியே நேரத்தை கடத்திக்கொண்டிருந்தார்.

என்ன சார், நாளையில இருந்து என்ன பண்றதா உத்தேசம். காலம் காலமா எல்லாரும் பண்றா மாதிரி காலையில பால் [...]

முழு பதிவையும் வாசிக்க »

பழைய இடுகைகள் »