நான் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டிய அளவுக்கு complex இல்லை. பழைய குமுதம் ஸ்டைலில் ”நான்”.
வைத்த பெயர் - லஷ்மண் குமார். D (இனிஷியலுடன் தான் சொல்லி பழக்கம், கல்லூரி வரையில்)
பிறந்தது – வட தமிழ் நாட்டில் (இன்னமும் எந்த சினிமாவும் அங்கே எடுக்கவில்லை)
வளர்ந்தது – வளர்ந்தேனா, என்பது இன்னமும் சர்ச்சைக்குரிய கேள்வி.
படித்தது – ஆணி பிடுங்க தேவையான அளவு படித்திருப்பதாக என்னை நேர்முகம் செய்தவர்கள் வருத்ததுடன் தெரிவித்தார்கள்.
பிடித்தது – கத்தி களேபரமான இடத்தில், கமுக்கமாக உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது. களேபரத்துக்கு காரணம் நானாக இல்லாத வரையில்.
வாசிப்பது – அப்போது, ரத்தம் ஒரே நிறம். இப்போது, கண்ட குப்பை (வேறேன்ன, இன்டர்நெட் தான்). நாளை, சொல்வதற்கில்லை ராணி காமிக்ஸ் கூட படிக்கலாம்.
இப்போதைய இருப்பிடம் – செவ்விந்தியர்கள் வாழ்ந்த இடம்.
விரும்புமிடம் – பிள்ளையார் பால் குடித்த நாடு.
சுற்றி பார்க்க விரும்புமிடம் – அலாஸ்கா, கிரீன்லேண்ட், ஹவாய், எட்டி பார்க்காத அத்தனை இந்தியா, ஏஞ்சல் அருவி, அமேஸான் காடுகள், நைல் நதி. சஹாரா, நேபாள், எகிப்த், பரந்து விரிந்த ரஷ்யா. வாய்ப்பு கிடைத்தால் நிலவுக்கு கூட.
வயது - ‘இவனுக்கு ஒரு கல்யாணத்த பண்ணி வெச்சிட்டா…..’ என்று பெருசுகள் அனத்திகொண்டிருக்கிற நிலைமை (வருத்தத்துடன் – as on 10/07).