Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

ஏப்ரல், 2007 க்கான தொகுப்பு

Apollo – 13. ஹாலிவுட்டில் சக்கை போடு போட்ட இன்னொரு படம் . இது போன்ற படங்கள் எப்போதும் செய்வதையே தான் இதுவும் செய்தது. பார்ப்பவரை சீட்டின் நுனியில் கொண்டு செல்வதை தான் சொல்கிறேன். இது இன்னுமொறு உண்மை சம்பவ தழுவல்.விண்வெளி மற்றும் அது சம்மந்தபட்ட விஷயங்கள் அங்கங்கே வந்தாலும் ‘அட போங்கப்பா’ என சொல்லவைக்கவில்லை. நமக்கே மேலே இருப்பவர்களை கீழே கொண்டு வர நாசாவில் நாமும் இருந்திருக்க மாட்டோமா என ஏங்க வைக்கிறார்கள்.நடித்தவர்கள் அத்தனை பேரையும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

வெயில் கசகசக்கும் மதியத்தை கடந்த மாலையில், சிலர் மட்டுமே கூடியிருந்த பார்ட்டி. கடமைக்காக சிலரும், டீ காபி போண்டாவுக்காக சிலரும், வருத்ததுடன் சிலரும், சந்தோஷத்துடன் சிலரும் உலாத்தி கொண்டிருந்தார்கள்.

இவர் மகிழ்ச்சியும் வருத்தமும் பயமும் கலந்து கட்டிய முகத்துடன் பேசிக் கொண்டே, பழைய நினைவுகளை அசை போட கூடாது என்றே தன்னை எதாவது ஒரு விஷயத்தில் நுழைத்துகொண்டபடியே நேரத்தை கடத்திக்கொண்டிருந்தார்.

என்ன சார், நாளையில இருந்து என்ன பண்றதா உத்தேசம். காலம் காலமா எல்லாரும் பண்றா மாதிரி காலையில பால் [...]

முழு பதிவையும் வாசிக்க »

இரு சேனல்களுக்கு இடையே நடந்த அப்பட்டமான மோதலை/போட்டியை காட்டிய நிகழ்ச்சி இது. அத்தனை சிக்கல்களையும் கொஞ்சம் மறந்து விட்டு பார்த்ததில் சிறிது லேசாகத்தான் இருந்தது. பல சமயம், மெல்லிய புன்னகை புரிய மட்டுமே சம்பவங்கள் இருக்கிறது. பக்கத்தில் இருப்பவர் அதிறும் அளவுக்கு சிரித்து பல நாளாகி விட்டது. இந்த நிகழ்ச்சியில் பலர் நாம் அப்படி மாற உத்திரவாதம் கொடுக்கிறார்கள்.

இந்த வடிவேல் கணேஷ் மற்றும் அவரின் நாட்டுபுற பாடலும் நிஜத்திலும் அசத்தல். கிண்டலும், கேலியும், பரிதாபமும் கலந்தே பல [...]

முழு பதிவையும் வாசிக்க »

Forward

எப்பொழுதும் forward மெயில்களை பார்த்து விட்டு delete செய்வது வழக்கம். இன்றைக்கு வந்த இந்த கவிதை (கவிதை நடையில் இல்லாவிட்டாலும்), அப்படியில்லாமல், இங்கே பதிய வேண்டும் என தோன்றியது.
கணிணி கனவாண்களேகொஞ்சம் செவி கொடுங்கள்இங்கே சில பேர் உங்களுக்காக காத்து கொண்டிருக்கிறார்கள். இவன்(ள்) எங்க கிட்ட சிரிச்சு பேசியே பல நாளாகுதுஉன் அப்பா, அம்மா இப்படி.நாம பீச் எப்போ கடைசியா போனோம்னு மறந்தே போச்சுஉன் மனைவி.அப்பா, நீ என் கூட வெளயாட வர வேண்டாம், என்க்கு சாதமாச்சும் ஊட்டி [...]

முழு பதிவையும் வாசிக்க »

யாரிது என்று சிலரை பற்றியே நமக்கு தெரிந்து கொள்ள தோன்றும். Google அவர்களுடைய லோகோவை ஏப்ரல் 12 அன்று இவருக்காக மாற்றியபோது, விக்கிபீடியா உதவியுடன் இவரை பற்றி தேடினேன்.
இப்போது சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் மராத்தான் ஒடி கொண்டிருப்பதை, அட இவ்வளவு தானா என நிறைய பேர் நினைப்பதில் ஆச்சரியமில்லை. சம்மருக்கு குளிர் பிரதேசங்களுக்கு போவதெல்லாம் அலுத்து விட்டது. நேராக வான்வெளிதான், இப்போதைய பணம் படைத்தவர்கள்.
1961, மனிதர்கள் பூமிக்கு அப்பால் என்ன என்பதை குறு [...]

முழு பதிவையும் வாசிக்க »

Go… இனி ஜல்சா பண்ணுங்கடாகுஜாலா ஜில்பா காட்டுங்கடா
முதலில் கேட்டபோது, ஆம்பலும் மௌவலும் ஆட்டி படைத்துகொண்டிருக்கும் நேரத்தில் போது இந்த மாதிரி பாடல்கள் தேறுமா, என்று கேள்வியே முன் நின்றது. ஆனால், மறுபடி மறுபடி கேட்டால், ஜில்பாவாகத்தான் இருக்கிறது.

நம் கவிஞர்கள் இளசுகளை எப்படி உசுப்பேத்துவது என்று நன்றாகவே பாடம் படித்துள்ளார்கள். யுவனிடம் வெங்கட் பிரபுவும் சரணும் ‘தியேட்டர் குலுங்கனும், அந்த மாதிரி ட்யுன் போட்டு குடு’ என சொல்லியிருப்பார்களோ? கேட்கும் போது குலுங்கவே வைத்துள்ளார், யுவன்.

சென்னை – 600028, [...]

முழு பதிவையும் வாசிக்க »

70 மில்லியன் வலைபதிவுகள்120,000 புதியவை, ஒவ்வொரு தினமும்ஒவ்வொரு நொடியும் 1.4 வலைபதிவுகள் புதியவையாக துவங்கபடுகின்றன3000 முதல் 7000 வரை பதிவுகள் தினமும்35 மில்லியனிலிருந்து 75 மில்லியன் ஆவதற்கு ஒன்றுமில்லை ஜென்டில்மேன் 360 நாட்கள் தான்ஜப்பான் சகோதர சகோதரிகள் பதிவு எழுதுவது தான் அதிகம். 37%.ஆங்கிலம் அவர்களுக்கு அடுத்தபடி. 33% (இந்த வருடம் விட்டு கொடுத்துவிட்டார்கள்)
இப்படியெல்லாம் புள்ளி விவரத்தை அள்ளி தெளிக்கிறார்கள் Technorati மக்கள்.

இத்தனை இருந்தும் நம் நட்பு வட்டாரங்கள் பலருக்கு பதிவுலகம் இப்படி பல்கி பெருகியிருப்பது தெரிந்திருப்பதில்லை. [...]

முழு பதிவையும் வாசிக்க »

இலவச broadband

ஏப்ரல் 1. நமகெல்லாம் தெரிந்தவர்களை முடிந்தவரை ஏமாற்றவோ இல்லை அதிர்ச்சிகுள்ளாகவோ ஆக்கலாம். நானெல்லாம் அதற்கு அதிகம் யோசித்ததில்லை. சிலர் வார கணக்கில் யோசித்து ஏப்ரல் 1 அன்று திட்டத்தை அமுல்படுத்துவார்கள்.

இதோ நம் கூகுளாண்டவரின் திட்டம். நான் கூகுள் பக்கம் பார்த்தவுடன், என்னடாது இலவசமா Wireless broband internet connection குடுக்கறாங்க (Google TiSP). சரி, என்ன விசயமென்று கொஞ்சம் உள்ளே நுழைந்தேன். படிக்க படிக்க என்ன கருமம்டா இது என்று தோன்றியது. இப்படியெல்லாம் இவுங்களுக்கு ஏன் யோசனை [...]

முழு பதிவையும் வாசிக்க »