At last they got him completely.
டிசம்பர், 2006 க்கான தொகுப்பு
Posted in Uncategorized on டிசம்பர் 30, 2006 | Leave a Comment »
சான் பிரான்ஸிஸ்கோவும் மசாலா தோசையும்…
Posted in Uncategorized on டிசம்பர் 28, 2006 | 2 மறுமொழிகள் »
வழக்கம் போல ரயிலில் இன்றைய நியுஸ் பேப்பர். இங்கே நிறைய பேருக்கு படிக்க மட்டுமே நேரம் உள்ளது, அதை வைத்து கொள்ள பிரியபடுவதில்லை. இது ஒரு வகையில் என்னை போன்றோருக்கு (ஒசின்னு சொல்ல வரேன்) உதவி தான். எப்போதும், பட படவென்று திருப்பிவிட்டு, என் போக்கில் பாட்டு கேட்பது வழக்கம். இன்றைக்கு கொஞ்சம் படிக்கவும் செய்தேன். படித்தது சான் பிரான்ஸிஸ்கோ க்ரானிகல் (San Francisco Chronicle), செய்தி நம்ம ஊர் தோசை பற்றியது. இந்தியா என்ற வார்த்தை [...]
இருட்டு கடை
Posted in Uncategorized on டிசம்பர் 27, 2006 | 4 மறுமொழிகள் »
காலையில் குற்றாலத்தில் குளித்த சுகம். தலை எல்லாம் மசாஜ் செய்து விட்ட உணர்வு. திருநெல்வேலி ரயில் நிலையத்தில் உள்ள கடையில் இருட்டு கடை எங்கே இருக்கிறது என்றேன். வழி சொன்னார். நெல்லையப்பர் பார்வை படும் இடத்தில் போனால் அங்கே தான் என்று வழி காட்டினார். கூடவே, ‘இப்போ போகாதீங்க, சாயங்காலம் 5 மணிக்கு தான் திறப்பாங்க’. ரயில் 5:45க்கு. இருந்தாலும், அந்த கடையை பார்த்து விட்டு, அல்வாவையும் நேரில் வாங்கி விட வேண்டும் என்ற நீண்ட நாள் [...]
Happy Christmas
Posted in Uncategorized on டிசம்பர் 25, 2006 | Leave a Comment »
எல்லோரும் Happy Holidays சொல்லி கொண்டிருக்கிறார்கள். மகிழ்ச்சியான தருணங்கள்.Jesus Christ. இவரின் பிறந்த நாள், கண்டிப்பாக சிறந்த தினமே. மனிதமும், அமைதியும், இரக்கமும் சொல்லி கொடுத்த இவரின் குரல் நம்மில் பலருள் இன்னும் எதிரொலித்து கொண்டு தான் இருக்கிறது.அவர் போதித்த அத்தனையும் பின்பற்ற முடியாத கால கட்டங்கள் இப்போது. ஆனாலும் கண்டிப்பாக அதை நினைக்கவாவது செய்வது அவரை சந்தோஷ படுத்தும்.மனிதம் எல்லோருக்குள்ளும் பல நேரங்களில் மறைந்து போகும், தன் வாழ்க்கை, தன் பாதுகாப்பு என்று நினைக்கும் போது. [...]
Roman Holiday
Posted in Uncategorized on டிசம்பர் 25, 2006 | 2 மறுமொழிகள் »
மறுபடியும் ஒரு பழைய படத்தின் பார்வை.என்ன தான் இது போன்ற படங்கள் பலரால் விமர்சிக்கபட்டு, சிலாகிக்கபட்டு இருந்தாலும் இதை பற்றி எழுதும் எண்ணத்தை தவிர்க்க முடியவில்லை.Audrey Hepburn , இவர் மட்டுமே இந்த படத்தை தன் பார்வையால், தன் சிரிப்பால், தன் பேச்சால், தன் குரலால், தன் வசன உச்சரிப்பால் தூக்கி நிறுத்தியிருக்கிறார். முதல் படமான இந்த படத்தில் அவருக்கு சிறந்த கதா நாயகிக்கான அகாடமி விருது கிடைத்ததில் தவறே இல்லை.முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி [...]
ஜோசப் பார்பரா
Posted in Uncategorized on டிசம்பர் 19, 2006 | 2 மறுமொழிகள் »
இவரை கேள்விபட்டதுண்டா? (எங்கள கேக்கறியே உனக்கு தெரியுமான்னு கேக்கிறது புரியுது) எனக்கும் இன்று தான் தெரிய வந்தது. ஆனால், அவர் இன்று இறந்த செய்தி மூலமாகத்தான்.பெரும்பாண்மையான நேரங்களில் திரைக்கு பின் இருக்கும் பலர் அந்த இருட்டுடனேயே வாழ்ந்து அதிலேயே இறந்தும் போகிறார்கள். திரையில் தோன்றும் அனைவரும் அதற்கு மாறாக வான்புகழ் அடைகிறார்கள். இவரின் படைப்பு என்னவென்று கேட்கிறீர்களா? டாம் அன்ட் ஜெர்ரி. இதை பார்க்காமல் வளர்ந்த குழந்தை எங்காவது உண்டா? அத்தனை குழந்தைகளின் சந்தோஷத்தையும் இந்த கார்ட்டூன் [...]
அவள் அப்படித்தான்…
Posted in Uncategorized on டிசம்பர் 18, 2006 | 4 மறுமொழிகள் »
அவள் இறப்பாள், மறுபடியும் பிறப்பாள். இறப்பாள், பிறப்பாள். இறப்பாள், பிறப்பாள்… அவள் அப்படித்தான்…அழகாய் முடிகிறது ‘அவள் அப்படித்தான்’ படம். வெளியாகி 28 வருடங்கள் ஆன பின் நான் பார்க்கிறேன். வெளியான நேரத்தில், நான் இந்த உலகத்தில் பிறக்க கூட இல்லை. ஆனால், இன்று விவாதிக்கப்படும் பல விஷயங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளது பெறும் ஆச்சரியமே.
இப்படி கூட படம் எடுக்க முடியுமா என்று யோசிக்க வைத்தது என்னவோ உண்மை தான். இயக்குனர் ருத்ரையாவிடம் நிறைய தில் அப்போதே. நிச்சயம், [...]
பாரதி
Posted in Uncategorized on டிசம்பர் 11, 2006 | 2 மறுமொழிகள் »
அது என்ன எட்டயபுரத்தில் மட்டும்ஒருத்திக்கு நெருப்பை சுமந்த கருப்பைகல்லூரி நாட்களில் தமிழ் நூலில் வந்த வைரமுத்துவின் வரிகள். அந்த நெருப்பிடம் மனம் பறி கொடுத்தோர் பலர். இன்றும் பலர்.பாரதிஉனக்கு மரணத்தின் பின்னும்கேட்கும் திறம் உண்டு என்பதனால்
நீ விரும்பிய அனைத்தும்இக்கணம் கிடைக்கும்நீ கனவு கண்டஅத்தனையும் கைக்கு எட்டிய தூரத்தில்உன் முயற்சி எதுவும்விழலுக்கு இறைத்த நீராகி விடவில்லை
ஆனால்…இவை எல்லாம்நீ நினைத்ததுநீ கனா கண்டதுநீ முயற்சித்ததுஎன்று எங்கள் சந்ததிகளுக்குநாங்கள் சொல்ல எங்களுக்குநேரமில்லைஅரசாங்கத்துக்கும்நேரமில்லை
உன்னை மறுபடியும்பிறக்க சொல்லிபாட சொல்லிநாங்கள் வற்புறுத்த போவதில்லை
ஆனால்,நாங்கள் வற்புறுத்துவதுமறுபடியும் பிறந்து [...]
வெயில் – ரொம்ப மோசமில்ல
Posted in Uncategorized on டிசம்பர் 11, 2006 | Leave a Comment »
ஷங்கர் இந்த படத்த இன்னமும் பாக்கல போல இருக்குடா. இது வெயில் படத்தை பார்த்தவுடன் தியேட்டரில் இருந்த ஒருவரின் கமெண்ட்.மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கிய ஒரு திரைப்படம். ஷங்கரின் தயாரிப்பில் வந்த இரண்டு படங்களும் ஏற்படுத்திய தாக்கமும், அதன் அசாத்திய வெற்றியும் தான்.
வசந்தபாலன் பல இடங்களில் பளிச்சிடுகிறார். கதை மற்றும் கதாபாத்திர களம் ஆகியவற்றை கூடுமானவரை வித்தியாசபடுத்த முயற்சி செய்திருக்கிறார். அதில் பலனும் காண்கிறார். ஒரு டுயட் விருது நகர் வீதிகளில் மட்டுமே எடுக்கபட்டுள்ளது.
பசுபதி நிறைய அழுகிறார், கூடவே [...]